முகப்பு
தற்போதைய செய்திகள்

விளையாட்டில் இடையூறு செய்ததாக லாரி ஓட்டுனர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பனங்குடியில், கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டிற்கு இடையூறாக லாரியை நிறுத்திய ஓட்டுநரை, கிரிகெட் மட்டையால் செவ்வாய்க்கிழமை

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:12 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள பனங்குடியில், கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டிற்கு இடையூறாக லாரியை நிறுத்திய ஓட்டுநரை, கிரிகெட் மட்டையால் செவ்வாய்க்கிழமை தாக்கிய சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

அன்னவாசல் அருகே உள்ள பனங்குடியைச் சேர்ந்தவர் ரா. தங்கராஜ்(50) லாரி ஓட்டுனர், இவர் கடந்த செவ்வாய்க்கிழமை(மார்ச், 31) பனங்குடியில் உள்ள குளக்கரையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இடையூறாக லாரியை நிறுத்தியதாக கூறப்படுகிறது, இதனால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆ. பாலசந்தினுக்கும்(23) தங்கராசுக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த பாலசந்திரன் கிரிக்கெட் மட்டையால் தங்கராஜ் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தங்கராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனிற்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் ஆர். பாலசுந்தரம் வழக்கு பதிந்து பாலசந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.