திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முருகனின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழா வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அதிகாலை
4.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாhத்தாண்ட அபிஷேகமாகி, அருள்மிகு வள்ளியம்மன் தபசுக்கு புறப்பாடு நடைபெற்றது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை
4.35 மணிக்கு சுவாமி திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னதித்தெரு வழியாக சிவன் கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து பந்தல் மண்டபம் முகப்பில் வைத்து சுவாமி அம்மனை 3 முறை வலம் வந்து, சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் சுவாமி, அம்மன் திருவீதி வலம் வந்து, இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு வைத்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
குன்றுமேலய்யன் சாஸ்தா :திருக்கோவிலின் உபகோவிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொ) செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.