வடலூர் அருகே ஏரியில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஏரியில் மூழ்கிய எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவர் பலியானார்கள்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஏரியில் மூழ்கிய எட்டாம் வகுப்பு மாணவர்கள் இருவர் பலியானார்கள்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள வடகுத்து கிராமத்தில் ஈசன் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாசன வசதி பெருகிறது. மேலும் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. சனிக்கிழமை காலை அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் இந்த ஏரியில் குளிக்கச்சென்றுள்ளனர். அவர்களில் சிலர் வீடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஏரிக்கு சென்ற போது அங்கு இரு சிறுவர்கள் தண்ணீரில் மிதப்பது தெரியவந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமமக்கள் ஏரியிலிருந்து மிதந்த சிறுவர்களின் உடலை கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் விசாரணையில் அச்சிறுவர்கள் இருவரும் மேல்வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், இறந்த சிறுவர்கள் சக்திவேல் மகன் சௌந்தரவேல் (13), சின்னதுரை மகன் வினோத்(13) எனவும் தெரியவந்தது. மேற்கண்ட சிறுவர்கள் இருவரும் பொன்னன்குப்பம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இதில் வினோத்தின் தாயார் ஏற்கனவே இறந்துவிட்டார். அவரது தந்தையும் வெளியூரில் வேலை செய்து வரும் நிலையில் தமது தாத்தா ராமலிங்கத்துடன் வசித்து வந்துள்ளார். சிறுவர்கள் ஏரியில்மூழ்கி இறந்தசம்பவம் அப்பகுதியில் சோகத்தில் மூழ்கியது.