தற்போதைய செய்திகள்

சந்திர கிரகணம் - திருநள்ளாறில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம்

சந்திர கிரகணத்தையொட்டி தமிழகம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சனிக்கிழமை பல மணிநேரம் நடை சாத்தப்பட்ட நிலையில், திருநள்ளாறு கோயிலில் வழக்கம்போல்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

சந்திர கிரகணத்தையொட்டி தமிழகம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சனிக்கிழமை பல மணிநேரம் நடை சாத்தப்பட்ட நிலையில், திருநள்ளாறு கோயிலில் வழக்கம்போல் தரிசனம் நடைபெற்றது. வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றமின்றி தரிசனம் செய்துச்சென்றனர்.

சந்திர கிரகணம் சனி்க்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்குத் தொடங்கி 7.15 மணி வரை நீடிக்குமென  வாக்கியப் பஞ்சாங்கம் தெரிவி்க்கிறது. தமிழகத்தின் முக்கிய பல கோயில்களில் 11 மணி நேரம் நடை சாத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலும் இதுபோன்று நடை சாத்தப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

திருநள்ளாறு நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வரன் அருள்பாலிக்கும் ஸ்தலம். இக்கோயிலில் சனிக்கிழமை சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், அதிகாலை முதல் இரவு வரை வழக்கம்போல் நடை திறந்திருக்குமென கோயில் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்ட நடை, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து இக்கோயில் நிர்வாக அதிகாரி  எஸ்.கே.பன்னீர்செல்வம் கூறும்போது, சூரிய, சந்திர கிரகணம் ஏற்படும்போது, பல கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கமாக இருந்தாலும், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இவ்வழக்கம் கிடையாது. இக்கோயிலில் ஸ்தல விருட்சம் தர்ப்பையாகும். தர்ப்பை வனத்தில் கோயில் கட்டப்பட்டது  கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வல்லது தர்ப்பை. இந்த கருத்தின் அடிப்படையில், கிரகண காலகட்டத்தில், நடை சாத்தப்படுவது இல்லை. சனிக்கிழமை கிரகணம் ஏற்பட்டாலும்,  இக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அனைவரும்  ஏமாற்றமில்லாமல் தரிசனம் செய்துச் சென்றனர். சனிக்கிழமையில் நடக்கும் வழக்கமான பூஜைகள் கோயிலில் நடத்தப்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT