தற்போதைய செய்திகள்

ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்

காவிரியாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்கக் கோரி ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கு. வைத்திலிங்கம்

காவிரியாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்கக் கோரி ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் ஆளோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணையைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது,. திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வே. துரைமாணிக்கம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு விவசாயச் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் ம. சுப்பிரமணி, சி. மாசிலாமணி தலைமை வகித்தனர்.

மாவட்டச் செயலர்கள் அயிலை சிவசூரியன், வி.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் க.சுரேஷ்,  தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT