சிதம்பரம் நகர குளத்தில் மீன்வலையில் சிக்கிய முதலை!
சிதம்பரம் நகரில் உள்ள குளத்தில் மீன்வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
சிதம்பரம் நகரில் உள்ள குளத்தில் மீன்வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
சிதம்பரம் கனகசபைநகரில் ஸ்ரீநடராஜர் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசர் குளம் உள்ளது. இந்த குளத்தில் சுப்பிரமணியன் என்பவர் குத்தைகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக முன்பு பாலமான் வாய்க்காலில் இருந்து முதலை ஒன்று குளத்திற்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சென்று தேடிபார்த்தும் முதலை கண்ணில் தென்படாததால் திரும்பினர்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை குளத்தில் வலைவீசி மீன்பிடிக்கும் போது வலையில் 6 அடி நீளம், 70 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், எம்.செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் சென்று முதலையை பெற்று, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.