முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட வறட்சி நிவாரணம்: ரூ.50 கோடி ஒதுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சாமாளிக்க தமிழக அரசு உடனடியாக வறட்சி நிவாரணமாக மாவட்டத்திற்கு ரூ.50 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சாமாளிக்க தமிழக அரசு உடனடியாக வறட்சி நிவாரணமாக மாவட்டத்திற்கு ரூ.50 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழக தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்து, கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடுமையான குடிநீர் பிரச்னையை எதிர்நோக்கும் அதே நேரத்தில், கால்நடைகள் மற்றும் வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையை சமாளிக்க தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.50 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்.

மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில், குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியப்போக்கால், மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் சில ஊராட்சிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள இத் திட்டம் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள பொது நிதியிலிருந்து, உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளை திருப்திபடுத்தும் வகையில் தேவையற்ற பணிகள் நிறைவேற்றப்படுவதால் அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை உள்ளது. பொது நிதியை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று, அவசர அவசியம் கருதி குடிநீர் திட்டப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி்க்கை மனுவில் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →