இலுப்பூர் அருகே கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி சாவு
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே விவாசாய தோட்டத்தில் கிணறு வெட்டும் போது மேலிருந்த மண் கிணற்றுக்குள் சரிந்து விழுந்ததில் கிணறு வெட்டும் பணியிலிருந்த தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே விவாசாய தோட்டத்தில் கிணறு வெட்டும் போது மேலிருந்த மண் கிணற்றுக்குள் சரிந்து விழுந்ததில் கிணறு வெட்டும் பணியிலிருந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
விராலிமலை பேராம்பூர் அருகே உள்ள தெற்கு மலம்பட்டியைச் சேர்ந்தவர் துரை(எ)சவரிமுத்து (55) கிணறு வெட்டும் தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்களுடன் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடியில் ராசு என்பவரது தோட்டத்து கிணற்றை ஆழபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை மாலை கிணற்றில் உள்ள மண் கலந்த கற்களை மண்சட்டியில் வைத்து உருளை மூலம் மேலே இழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென்று மண் சட்டி தவறி கிணற்றுள் வேலை பாரத்துக்கொண்டிருந்த சவரிமுத்து தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த துரை(எ)சவரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து இலுப்பூர் காவல் ஆய்வாளர் ஆர். பாலசுந்தரம்(பொ) வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்