முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் பதற்றம்: இறந்தவர்களின் உடல்களோடு பொதுமக்கள் சாலை மறியல்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் ஆந்திர போலீசரால் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12 பேரை ஆந்திர போலீசார் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றனர்.

அவர்களது உடல் அடையாளம் காணப்பட்டு 12 பேரின் சடலங்களும் வியாழக்கிழமை அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமருதூர், வேட்டைகிரிபாளையம், படவேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு கொண்டுவரப்பட்டது.

இன்று 12 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறவிருந்த நிலையில் வேட்டைகிரிபாளையத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உறவினர்கள் சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சத்தை, ரூ.25 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அமைச்சர் நேரில் வந்து ஆறுதல் கூற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய படவேடு கிராமத்தில் சாலை மறியல் நடத்தி வருகின்றன.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. தள்ளுமுள்ளில் ஈடுபட்ட போலீசார் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.