தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே கண்மாயை தூர்வார தனிநபர் எதிர்ப்பால் திரும்பி செல்லும் தொழிலாளர்கள் 

விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை கண்மாயை தூர்வாரவிடாமல் தனிநபர் தடுத்ததால் வேலை செய்யாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை கண்மாயை தூர்வாரவிடாமல் தனிநபர் தடுத்ததால் வேலை செய்யாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கூரைக்குண்டு ஊராட்சியைச் சேர்ந்தது  செவல்பட்டி கிராமம். இக்கிராமம் அருகே உள்ள கண்மாயை தூர்வாரும் பணிக்காக தேசிய ஊரக திட்ட தொழிலாளர்கள் 100 பேர் வியாழக்கிழமை வேலைக்கு வந்தனர். அப்போது, அழகாபுரி கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் கண்மாய் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானாது என்றும் அதற்கு பட்டா உள்ளதாகவும் தெரிவித்தாராம். அதனால், இங்கு யாரும் வேலை செய்யக்கூடாது என தொழிலாளர்களையும் தடுத்தார். இதனால் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் திரும்பி ஏமாற்றத்துடன் சென்றனர்.

இது தொடர்பாக தொழிலாளி காளியம்மாள் என்பவர் கூறுகையில், இக்கண்மாய் எங்கள் கிராமத்திற்கு சொந்தமானது. இதற்கு போலியாக பட்டா தயாரித்து சொந்தம் கொண்டாடுகின்றனர். இக்கண்மாயில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும், அதை கிராம மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தியும் வந்தனர். அதனால் அதிக அளவில் நீர் தேக்கினால் கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் தூராவாருவதற்கு ஊராட்சியால் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, வேலை செய்ய முடியாமல் திரும்பிச் செல்கிறோம். இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து ஊராட்சி தலைவர் வேலாயுதம் கூறுகையில், இக்கண்மாய் யார் பெயரில் உள்ளது என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால், கிராம மக்கள் செவல்பட்டி கிராமத்திற்கு சொந்தமானாது என்கிறார்கள். இந்நிலையில் பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று வில்லங்கம் பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT