விராலிமலையில் கணவன் பேசாத வருத்தத்தில் மனைவி தீக்குளிப்பு
கணவன் பேசாத வருத்தத்தில் இருந்த மனைவி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்து உடல்கருகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்
கணவன் பேசாத வருத்தத்தில் இருந்த மனைவி உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்து உடல்கருகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள குறிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் எம். பெரியசாமி(45) இவரது மனைவி இந்திரா(38) இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தையை கண்டித்தது தொடர்பாக கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த வந்த நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணென்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டாராம், இதில் உடல் முழுவதும் கருகிய நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.