விராலிமலை சரளபட்டியில் அனுமதியின்றி மதுவிற்ற இருவர் கைது
விராலிமலை அருகே உள்ள சரளபட்டியில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள சரளபட்டியில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சரளபட்டி பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதிகளில் சனிக்கிழமை காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி மற்றும் போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர், அதனைத்தொடர்ந்து சரளபட்டி பகுதி பெட்டிக்கடைகளில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த கவரப்பட்டி து. பழனிவேல்(41) ஏ. ராமசாமி(37) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 10 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.