தற்போதைய செய்திகள்

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்: எஸ்.பியிடம் புகார்

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டிராஜனுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மாலையில் நேரில் புகார் செய்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டிராஜனுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மாலையில் நேரில் புகார் செய்தார்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியை அமைப்பதற்கான பணியினை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இப்பால பணியை மேற்கொள்ளும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ளோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவு பெற்று இடையூறு செய்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலின் போது அப்போதைய முதல்வர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கும், அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரேயுள்ள இவரது சொர்ணாம்மாள் அறக்கட்டளை அலுவலக முகவரிக்கும் அஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியின் வந்தேரி பாண்டியராஜனே, ராமமூர்த்தி மேம்பால விஷயத்தில் இனியும் தலையிட்டால் தலை இருக்காது என்றும் இதுவே இறுதி எச்சரிக்கை என்றும் முடிக்கப்பட்டிருந்தது. அதோடு, அபாய எச்சரிக்கை குறிப்பிட்ட தலைப்படம் மற்றும் அரிவாள் வரைந்திருந்தது.

இது தொடர்பாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் மாவட்ட காவல் துறை கண்காணி்ப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேரில் புகார் செய்தார். அதையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பியும் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT