ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் தகராறு: ஒருவர் குத்திக் கொலை: இருவர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை, மது போதையில் குளிக்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்தார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் தகராறு: ஒருவர் குத்திக் கொலை: இருவர் காயம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை, மது போதையில் குளிக்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை, மது போதையில் குளிக்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராக்காச்சியம்மன் கோவில் உள்ளது. இப் பகுதியில் தற்போது தண்ணீர் வரத்து உள்ளது. இதில் குளிப்பதற்காக ராஜபாளையம், மேலஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (27), தர்மதுரை (24), அய்யப்பன் (25) உள்ளிட்டோர் வந்துள்ளனர். இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆம்னி வேனில் சுமார் 10 பேர் இங்கு வந்துள்ளார்கள். அப்போது ஆனந்தராஜ் தரப்பிற்கும் இவர்களுகம் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மது பாட்டில்களால் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களை குத்தியுள்ளார்கள். மேலும் கத்தியாலும் குத்தியுள்ளார்கள். இதில் ஆனந்தராஜ், தர்மதுரை மற்றும் அய்யப்பன் பலத்த காயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆனந்தராஜ் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்னி வேனில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.
குறிப்பிட்ட இரு சமுதாயத்தினரிடையே சிறு மோதல்கள் ஏற்படுவதும் அது பலத்த சாதி மோதலாக வலுப்பெறுவதும் வழக்கம். தற்போது இப் பகுதியில் வெண்கொடை திருவிழா வருவதால், இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் வந்து பார்வையிட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக மம்சாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸார் தீவிர முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்கள்.