தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு திருத்த முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது.

இந்திய முழுவதும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை திருத்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்றது. இதில், விருதுநகர் திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் வாக்காளர் மையத்திற்கு வந்து முழு விவரங்களான ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் இணையதளம் மின்னஞ்சல் முகவரி ஆகியவைகளை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அளித்து பதிவு செய்து கொண்டனர். இம்முகாமில் புதிதாக பெயர் விரும்புவோர் படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, பெயர் திருத்தம், வயது, பாலினம், பிறந்த தேதி, புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்களை விரும்புவோர் படிவம்-8, பெயர் மாற்றம் செய்ய விரும்புவோர் படிவம் 8ஏ போன்றவைகளில் விண்ணப்பங்களை அளித்து கணினியில் பதிவு செய்து உடனுக்குடன் திருத்தங்களை மேற்கொண்டனர்.

அதேபோல் நகராட்சி பகுதியில் உள்ள சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஹாஜி பி.செய்யதுமுகம்மது மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது விருதுநகர் நகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், வட்டாட்சியர் ராஜா, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT