தற்போதைய செய்திகள்

விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு சீல்

விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அறைகளுக்கு மதுரை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்து புதன்கிழமை நடவடிக்கை

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அறைகளுக்கு மதுரை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்து புதன்கிழமை நடவடிக்கை எடுத்தனர்.

மாநிலம் முழுவதும் நகரமைப்பு துறையிடம் அனுமதி பெறாமலும், விதிமுறை மீறி கட்டடங்களை அமைத்துள்ள பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் விருதுநகர்-சிவகாசி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு நகர ஊரமைப்புத்துறையின் துணை இயக்குநர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  அதிகாரி குழுவினர் வந்தனர். அக்கல்லூரி வளாகத்தில் அனுமதி பெறாமல்  அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மற்றும் அலுவலக அறை ஆகியவைகளுக்கு சீல் வைத்தனர்.

இது தொடர்பாக மதுரை மண்டல நகரமைப்பு துறையின் இணை இயக்குநர் மரியம்தாஸ் கூறுகையில், பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் அறைகள் அமைப்பதற்கு நகர ஊரமைப்பு துறையிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இக்கல்லூரியில் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி கூடுதலாக அறைகளை அமைத்துள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தடவை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் பதில் அளிக்க முன்வரவில்லை. மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கருதியே முதல்வர் மற்றும் அலுவலக வளாகத்திற்கு மட்டும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT