தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலம்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே தனியார் நூற்பாலை அருகே 4 வழிச்சாலை மையப்பகுதியில் செவ்வரளி செடிகளுக்கு மத்தியில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதை வியாழக்கிழமை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் காலை 11 மணிக்கு பார்த்துள்ளனர். உடனே விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்து செவ்வரளி் செடிகளுக்கு மத்தியில் கிடந்த சடலத்தை பார்வையிட்டதில் காயம் எதுவும் இல்லை.

மேலும், உயிரிழந்தவர் குறித்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்த போது  அடையாளம் தெரியவில்லை என்றனர். அதையடுத்து சட்டைப்பையில் தேடிபார்த்த போது ஓட்டுநர் உரிமத்தை எடுத்து பார்க்கையில் வெம்பக்கோட்டை அருகே உள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்(50) என்பது தெரியவந்தது. அதையடுத்து சடலத்தை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT