முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திர சம்பவம்: நெல்லையில் பசும்பொன் தேசியக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்....

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பசும்பொன் தேசியக் கழகம், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நெல்லையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன் பசும்பொன் தேசியக் கழகம்
சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் என்.ஜோதி முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பாளையங்கோட்டை மார்கெட்
மைதானத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் சேவியர் தலைமை வகித்தார்.

ஆந்திர போலீஸாரைக் கைது செய்ய வேண்டும். உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.