முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூரில் நிறுத்திவைக்கப்பட்ட காரில் 40 சவரன் நகை, பணம் கொள்ளை

கடலூரில் திருப்பாதிரிபுலியூர் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 17 ஏப்ரல், 2015 at 3:14 PM
பகிர்:

கடலூரில் திருப்பாதிரிபுலியூர் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரபாண்டியன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவர் பணம், நகைகளை எடுத்துக்கொண்டு காரில் திருப்பாதிரிபுலியூர் அருகே வந்துக் கொண்டிருந்தார். அப்போது காரின் டயர்  திடீரென பழுதானது. பழுது பார்ப்பதற்காக காரை பூட்டி ஓரமாக நிறுத்திவிட்டு மெக்கானி கடையே தேடிச் சென்றார்.

அப்போது அதை கண்காணித்துக் கொண்டிருந்து மர்மநபர்கள், காரின் பூட்டை உடைத்து, காரில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் நகை மற்றும் 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திரும்பி வந்து பார்த்து போது அதிர்ச்சியடைந்தார் காரின் சொந்தகாரர். இதையடுத்து  அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.