நடிகை மெஹ்ரின் பிர்சாதா திருமணம்!
மெஹ்ரின் பிர்சாதா திருமணம் செய்துகொண்டார்...
நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் நாயகியாக நடித்த மெஹ்ரின் பிர்சாதாவுக்குத் திருமணம் நடைபெற்றது.
பஞ்சாபி பெண்ணான நடிகை மெஹ்ரின் பிர்சாதா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா தனுஷுடன் பட்டாஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால், தமிழ் பெண்ணுக்கான முகவெட்டு இல்லாததால் தமிழில் பெரிதாக வளர முடியவில்லை. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். தற்போது, கன்னட படமொன்றில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு ஹரியாணா முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னாய்க்கும் மெஹ்ரினுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை.
இந்த நிலையில், மெஹ்ரின் பிர்சாதா திடீரென நேற்று (ஏப். 26) அர்ஷ் அவ்லாக் என்பவரை இமாச்சலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இந்நிகழ்வில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனராம்.
எந்த அறிவிப்பும் இல்லாமல் திருமண புகைப்படங்களை மெஹ்ரின் வெளியிட்டதும் அவை அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
Mehreen Pirzada, who played the female lead in actor Dhanush's film Pattas, has gotten married.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.