FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நான் இருந்தால்... மூன்று ரூ. 200 கோடி திரைப்படங்களைக் கொடுத்த மமிதா பைஜூ!

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுக்கும் மமிதா பைஜூ...

51 வினாடிகள் முன்பு
மமிதா பைஜூ
பகிர்:

நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரூ. 200 கோடி வசூலித்துள்ளது.

நடிகை மமிதா பைஜூ தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். தொட்டதெல்லாம் ஹிட் என்பது போல் மிகக் குறைந்த வயதிலேயே அதிக வெற்றிப்படங்களைக் கொடுத்த நாயகியாகியுள்ளார்.

தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றார். மேலும், நடிகர் தனுஷுடன் நடித்த கர எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து, முதல்வர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் லாபகரமான படமாக அமைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியது.

Advertisement

Advertisement

மேலும், நடிகர் சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நாயகியாக மமிதா நடித்திருந்தார். இப்படம் ரூ. 200 கோடி வசூலித்து பெரிய வெற்றிப்படமானது. அடுத்ததாக, நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடித்த இரண்டு வானம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நடிகர் நிவின் பாலிக்கு நாயகியாக மமிதா நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்து ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டிலேயே ஜன நாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகேம் குடும்ப யூனிட் என மமிதா பைஜூ நாயகியாக நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Films starring actress Mamitha Baiju as the female lead have consecutively grossed ₹200 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments