FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹாட்ரிக் வெற்றியில் மமிதா பைஜூ..! வரவேற்பில் பெத்லகேம் குடும்ப யூனிட்!

நடிகை மமிதா பைஜூ நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் குறித்து...

நடிகை மமிதா பைஜூ - படங்கள்: இன்ஸ்டா / பவானா ஸ்டூடியோஸ்.
பகிர்:

நடிகை மமிதா பைஜூ நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இன்று (ஆக.21) திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலையாளம் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடிகையாக மாறிவரும் மமிதா பைஜூ நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தை பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கியுள்ளார். பிரேமலு மாதிரியே நல்ல நகைச்சுவை, உணர்வுப்பூர்மான காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தப் படமும் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளதால், மமிதா பைஜூ ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் ஜன நாயகன் படமும் சூர்யா உடன் விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து அசத்தியுள்ளார்.

விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படமும் அதிக வயது வித்தியாசத்தில் இருக்கும் காதல் கதை என்பதும் இந்த பெத்லகேம் குடும்ப யூனிட் படமும் தன்னை விட கூடுதல் வயதில் இருக்கும் ஒருவரை காதலிப்பதாக வருவதும் குறிப்பிடத்தக்கது.

summary

Mamitha Baiju scores a hat-trick of hits! The Bethlehem Kudumba Unit extends a warm welcome!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments