மமிதா பைஜூ - சங்கீத் பிரதாப் நடிக்கும் புதிய படம்! முதல் பார்வை போஸ்டர்!
பிரேமலு பிரபலங்கள் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர்...
பிரேமலு படத்தின் பிரபலங்கள் மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர்கள் சங்கீத் பிரதாப் மற்றும் மமிதா பைஜூ தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்து வருகின்றனர்.
பிரேமலு நாயகியான மமிதா பைஜூ, தமிழக முதல்வர் விஜய்யின் “ஜன நாயகன்”, சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்”, பிரதீப் ரங்கநாதனின் “டியூட்” போன்ற படங்களில் நாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக உருவாகியுள்ளார்.
Advertisement
Advertisement
இதேபோல், பிரேமலு படத்தில் அமல் டேவிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சங்கீத் பிரதாப். இவர், மோகன் லாலுடன் “ஹிருதயபூர்வம்”, நிவின் பாலியுடன் “பேபி கேர்ள்” மற்றும் நஸ்லனுடன் “மோலிவுட் டைம்ஸ்” போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மமிதா பைஜூ மற்றும் சங்கீத் பிரதாப் இணைந்து நடித்துள்ள புதிய படத்துக்கு “ஹலோ டியர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கோவிந்த் வசந்த இசையில், அறிமுக இயக்குநர் டினோய் பாலோஸ் இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று (ஆக. 21) வெளியிட்டுள்ளனர்.
The first-look poster of a new film starring Mamitha Baiju and Sangeeth Prathap has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.