அதிக ஹிட்களை கொடுத்த 2கே நாயகியானார் மமிதா பைஜூ!
நடிகை மமிதா பைஜூ திரைப்படங்கள் வெற்றி பெற்று வருகின்றன...
நடிகை மமிதா பைஜூ நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியைப் பெற்றுள்ளன.
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. இப்படங்களில் தன் துறுதுறுப்பான நடிப்பைக் கொடுத்ததால் பிரேமலுவில் கதாநாயகி வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றார். மேலும், நடிகர் தனுஷுடன் நடித்த கர எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து, முதல்வர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் லாபகரமான படமாக அமைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியது.
Advertisement
Advertisement
மேலும், நடிகர் சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நாயகியாக மமிதா நடித்திருந்தார். இப்படம் ரூ. 200 கோடி வசூலித்து பெரிய வெற்றிப்படமானது. அடுத்ததாக, நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடித்த இரண்டு வானம் திரைக்கு வருகிறது.
இதற்கிடையே, நடிகர் நிவின் பாலிக்கு நாயகியாக பெத்லகேம் குடும்ப யூனிட் ஓணம் வெளியீடாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
ஒரிரு படங்களைத் தவிர மமிதா நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியைப் பெற்றுள்ளதால் ஜென் ஸி தலைமுறையில் அதிக வெற்றிகளைக் கொடுத்த இளம் நாயகி என்கிற பெயரை மமிதா பெற்றுள்ளார். நல்ல நடிப்பாற்றலும் அழகும் உள்ளதால் நீண்ட காலம் சினிமாவில் நடிக்கக் கூடிய நடிகையாகவே இருப்பார் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
The films starring actress Mamitha Baiju have mostly been successful.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.