தனுஷ் 56 படத்தில் உறியடி விஜய்குமார்? எகிறும் எதிர்பார்ப்பு!
நடிகர் தனுஷின் 56ஆவது படத்தில் நடிக்கவிருக்கும் உறியடி விஜய்குமார் குறித்து...
நடிகர் தனுஷின் 56ஆவது திரைப்படத்தில் உறியடி விஜய்குமார் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷின் 56ஆவது திரைப்படம் உருவாகிறது. இதன் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மதுரையில் துவங்குவதாகக் கூறப்பட்டது.
பின்னர், தாமதமான படப்பிடிப்பு இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தப் படத்தில் உறியடி படத்தின் இயக்குநரும் நடிகருமான விஜய்குமார் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
விஜய்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லப்பர் பந்து படத்திலும் இரண்டு நாயகன்கள் இருந்ததால், தனுஷ் படத்திலும் மற்றுமொரு நாயகனுக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உறியடி விஜய்குமார் கடைசியாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2023ல் ஃபைட் கிளப் படத்திலும், 2024ல் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் எலெக்ஷன் படத்திலும் நடித்திருந்தார்.
இந்தப் படத்துக்கான நாயகி தொடக்கத்தில் ருக்மணி வசந்த் நடிக்கவிருந்தார். பின்னர், அவருக்கான கால்ஷீட் பிரச்னையினால் சாரா அர்ஜுன் நடிப்பார் எனக் கூறப்பட்டது. இதுவரை நாயகி யாரென்று படக்குழு உறுதிசெய்யாமல் இருக்கிறது.
Uriyadi Vijaykumar plays an important role in Dhanush D56
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.