முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் 250 பேர் கைது

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 250 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

திருநெல்வேலியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 250 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்பப்பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், காலிப் பணியடங்களை நிரப்புதல், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு, சத்துணவு மையங்களை மூடுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி சந்திப்பு பேருந்துநிலையம் அருகே வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர். ராசையா தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர்கள் 250 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.