முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி; ஒருவர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 

Updated On : 19 ஏப்ரல், 2015 at 12:41 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:41 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரண ஆலங்காயம் அருகே உள்ள ஓமகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்சன்(50). இவர் ஓமகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரெஜினா மேரி (40). இவர் ஆலங்காயத்தை அடுத்த ரெட்டிவலசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணத்தூரில் உள்ள தேவாலய வழிப்பாட்டிற்காக காரில் இன்று அதிகாலை 4 மணிக்கு ஓம குப்பத்திலிருந்து புறப்பட்டனர்.

Advertisement

கார் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்த போது காலை 6.30 மணியளவில் நார்த்தாம்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதி  அருகே வந்துகொண்டிருந்த கார் நிலை தடுமாறி சாலையோர ஆலமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் வந்த இரண்டு குழந்தை மற்றும் நான்கு பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேய பலியாயினர். காயமடைந்த சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் திலீப்குமார்(28) ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் விவரம்: வில்லியம்ஸ்(50), ரெஜினாமேரி(40), சுசீலா(80), ஜாய்ஸ்(47), ஜோயல்(7), ஜெனித்(6), செல்வி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீஸார் 7 பேரின் பிரேதங்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.