தற்போதைய செய்திகள்

கரூரில் பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: ஆர்ப்பாட்டம்

கரூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஏ. அருள்ராஜ்

கரூரில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிஎஸ்என்எல்ஐ நலிவடையச் செய்யும் திட்டங்களை கைவிட்டு புத்தாக்கம் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரிவுப்படுத்த உபகரணங்கள் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல்லுக்கு அரசு கொடுக்க ஏற்றுக்கொண்ட நிதியை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களை குறைக்கும் டெலாயிட்டி கமிட்டி பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிóக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்ககள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இருநாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் மாவட்டத்தலைமை அலுவலகம் முன் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலர் ஆர்.முருகேசன், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் பி.ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.அண்ணாதுரை, சி.ராமநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் செயலர் ஜி.கரர்த்திகேயன் வரவேற்றார். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநில உதவிச் செயலர் பி.சுந்தரம், அதிகாரிகள் சங்கத்தின் தங்கராஜ், கணேசன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்க மாநில உதவிச் செயலர் பி.சுந்தரம் கூறுகையில்,எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஆர்ப்பாட்டம், மூன்று நாள் தர்ணா, கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளோம். இதையடுத்து சிஎம்டி, மத்திய தொழிலாளர் நல ஆணையர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துதல், பிராட்பேண்ட் வசதி, செல்போன் கோபுரங்களில் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசுகள் விரைவில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், செல்போன் சேவை, வங்கிகளில் பணப்பரிமாற்றம் சேவை, ஏடிஎம் சேவை முற்றிலும் முடங்கி விடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT