விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ரூ.3 லட்சத்தில் தங்கும் அறை
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் பணியாளர்கள் தங்கும் அறை
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 லட்சத்தில் பணியாளர்கள் தங்கும் அறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தம் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பிரசவித்த தாய், குழந்தையை ஏற்றிச் செல்வதற்கும், கிராமங்களில் இருந்து நோயாளிகளை ஏற்றி வருவதற்கும் என 108 ஆம்புலன்ஸ் 2 வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தவும், பணியாளர்கள் தங்குவதற்கான வசதியின்றி இருந்து வந்தனர். அதனால் தங்கும் அறை அமைக்க வலியுறுத்தி நீண்டநாள்களாக கோரிக்கை விடுத்தும் வந்தனர்.
அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள பிரசவ சிகிச்சை பிரிவு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு நிதியிலிருந்து மழையில் வாகனங்கள் நனையாமல் நிறுத்தும் வகையிலும், சுகாதார வளாக வசதியுடன் பணியாளர் தங்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.பிரகலாதன் தெரிவித்தார்.
Advertisement