தற்போதைய செய்திகள்

சமூக பொருளாதார, சாதி கணக்கெடுப்பு வரைவு பட்டியல் இன்று வெளியிடு

விருதுநகர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தகவல்கள் அடங்கிய வரைவு பட்டியல் உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொது இடங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு (திங்கள்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தகவல்கள் அடங்கிய வரைவு பட்டியல் உள்ளாட்சி அமைப்பு மற்றும் பொது இடங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு (திங்கள்கிழமை) வெளியிடப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 2011 சமூக பொருளாதார மற்றும் சாதிக்கணக்கெடுப்பு தகவல்கள் அடங்கிய வரைவு பட்டியல் ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.

     எனவே வரைவு வெளியீட்டில் உள்ள தகவலுக்கு எதிரான மறுப்புகளை படிவம் எ யிலும், திருத்தங்கள் மற்றும் மாறுதல்களை படிவம் பி யிலும், விடுபட்ட குடும்பங்களின் பெயர்களை சேர்க்க படிவம் சி யிலும் அதற்கான விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் ஊராட்சி அளவில் நியமனம் செய்யப்பட்ட அலுவலரிடமும், நகர் பகுதிகளில் வார்டு அளவில் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து மே-17ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், குறிப்பிட்ட படிவத்தில் இல்லாத விண்ணப்பங்கள், கையெழுத்து மற்றும் கைரேகை இல்லாத, முழுமையாக நிரப்பப்படாத, மொத்தமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT