முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வாகனங்கள் மோதல்: 16 பெண்கள் உள்பட 24 பேர் காயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 16 பெண் தொழிலாளர்கள் உள்பட 24 பேர் வரையில் திங்கள்கிழமை காயம் அடைந்தனர்.

Updated On : 27 ஏப்ரல், 2015 at 4:47 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:45 AM

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 16 பெண் தொழிலாளர்கள் உள்பட 24 பேர் வரையில் திங்கள்கிழமை காயம் அடைந்தனர்.

 விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு வழக்கம் போல் காலையில் ராமசாமிபட்டியிலிருந்து தொழிலாளர்களை வேனில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே திருத்தங்கல்லிருந்து பொம்மையாபுரம் பட்டாசு ஆலை நோக்கிச் சென்ற வேனும் கன்னிசேரி பிரிவு சாலையில் வரும் போது நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் வாகனங்களில் பயணம் செய்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கற்பகவல்லி(30), திருத்தங்கல் இலஞ்சியம்(30), பள்ளப்பட்டி சுப்புலட்சுமி(35), திருத்தங்கல் அழகுலட்சுமி(18), கருப்பாயி(40) உள்ளிட்ட 24 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் அறிந்த வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

மேலும், படுகாயம் அடைந்த 7 பேரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.