பணப்பாக்கம் கிராமத்தில் தேர்வு வினாத்தாள் மாயம்
பண்ருட்டி அடுத்துள்ள பணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டு பொதுதேர்வு நடந்து வருகிறது.
பண்ருட்டி அடுத்துள்ள பணப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டு பொதுதேர்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தலைமை ஆசிரியர் ஹேமலாதா விடுப்பில் சென்றதால் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து தனியார் பேருந்து நடத்தினரிடம் வினாத்தாள்களை கொண்டு சேர்க்க கூறியுள்ளார்.
அவர் ஆசிரியர் சரவணன் என்பவரிடம் வினாத்தாளை கொடுத்துள்ளார். அதன் பின்னர் சரவணன் ஒரு மாணவனிடன் அந்த வினாத்தாள்களை உதவி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமியிடம் கொடுக்க கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தேர்வு நடக்க இருந்த நேரத்தில் உதவி தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி தனக்கு வினாத்தாள்கள் வரவில்லை என கூறியுள்ளார். இதனால் தேர்வு குறித்த நேரத்தில் துவங்க வில்லை
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் செல்வம் பள்ளிக்கு விரைந்து வந்து மாற்று ஏற்பாடுகளை செய்து மாணவர்களை தேர்வு எழுதச் செய்துள்ளார்.