முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி வாலிபர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கீரனூர் சாலை காக்காகுடி காலனி அருகே திங்கள்கிழமை  சாலையோர புளியமரத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலையில் பலத்த

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கீரனூர் சாலை காக்காகுடி காலனி அருகே திங்கள்கிழமை  சாலையோர புளியமரத்தில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் கோசர்களத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரகுபதி(25) இவர் கடந்த திங்கள்கிழமை(ஏப்ரல்,27)  விராலிமலை வந்துவிட்டு கோசர்களம் திரும்பிக்கொண்டிருந்தார்,  விராலிமலை கீரனூர் சாலை காக்காகுடி காலனி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது, இதில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவ்வாய்கிழமை இறந்தார்.  இதுகுறித்து விராலிமலை போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.