தற்போதைய செய்திகள்

கார்கள் திருட்டு வழக்கில் இருவர் கைது

திருச்சி கருமண்டபம் பகுதிகளில் வாசலில் நின்ற கார்களை திருடிய இருவர் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சி.சண்முகவேல்

திருச்சி கருமண்டபம் பகுதிகளில் வாசலில் நின்ற கார்களை திருடிய இருவர் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கருமண்டபம் அருகேயுள்ள ஜெய்நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த அவரது கார் திருட்டு போனது. இதே போல் அதே பகுதி சக்தி நகரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்பவருடைய காரும் திருட்டு போனது. இருவரும் அளித்த புகார் குறித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிந்து கார்களை திருடிய மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை ஒத்தக்கடை பகுதியிலுள்ள வாகனங்களுக்கு பதிவெண்கள் எழுதும் ஒரு கடைக்கு காரில் வந்து இறங்கிய சந்தேகத்திற்குகிடமான  இருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கருமண்டபம், புதுத்தெருவைச் சேர்ந்த செல்வம்(24),தினேஷ்(25) ஆகியோர் என்பதும், இவர்கள் இருவரும் மேற்கண்ட நபர்களின் கார்களை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT