தற்போதைய செய்திகள்

சிவகாசியில் பெட்டிக்கடையில் மது விற்ற 2 பேர் கைது

சிவகாசி பகுதியில் பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 2 பேரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

சிவகாசி பகுதியில் பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக 2 பேரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி நகர் பகுதியில் இரவு நேரங்களில் பெட்டிக்கடைகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீஸார் திடீர் ரோந்து சென்றனர். அப்போது, அம்பேத்கார் நகர் பகுதியில் கடை வைத்திருக்கும் சிவகாசி செந்தில்முருகன், சிவன் கோயில் பகுதியில் கடை வைத்திருக்கும் சாராத நகரைச் சேர்ந்த முருகன்(48) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 33 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT