முகப்பு
தற்போதைய செய்திகள்

கஞ்சா வைத்திருந்த பல்கலை. மாணவர் கைது

சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பல்கலைக்கழக மாணவரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:16 AM
பகிர்:

சிதம்பரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பல்கலைக்கழக மாணவரை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து அரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

தெற்கு திருபுரா மாநிலம் சந்தீப்பஜார் தைக்காரா பகுதியைச் சேர்ந்த அஜீத் மஜீந்தர் (23). இவர் அண்ணாமலைநகர் முத்தையாநகரில் வீடு வாடகைக்கு எடுத்துதங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரோந்து சென்ற போலீஸார் முத்தையாநகர் பாலம் அருகே கையில் பையுடன் சந்தேகப்படும் நிலையில் நின்று கொண்டிருந்த அஜீத்மஜீந்தரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது கைப்பையில் அரை கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்து, மாணவர் அஜீத் மஜீந்தரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.