விராலிமலையில் குழிக்குள் தவறிவிழுந்த இருசக்கர வாகனம் வாலிபர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை திருச்சி சாலை காமராஜ் நகர் அருகே பாலம் அமைப்பதற்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் திங்கள்கிழமை தவறிவிழுந்த இருசக்கர
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை திருச்சி சாலை காமராஜ் நகர் அருகே பாலம் அமைப்பதற்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் திங்கள்கிழமை தவறிவிழுந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர், தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார்.
இலுப்பூர் அருகே உள்ள பன்னீர்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் நல்லுச்சாமி(27) வெளிநாட்டில் வேலைசெய்து வரும் இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் தனது மனைவி ஊரான விராலிமலை அருகே உள்ள ராசநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு தனது இருசக்கர வாகனத்தில் கடந்த திங்கள்கிழமை(ஏப்ரல்,27) வந்து கொண்டிருந்தார்.
விராலிமலை காமராஜ் நகர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், அங்கு சாலை விரிவாக்கப் பணிக்காக பாலம் அமைக்க வெட்டப்பட்டிருந்த குழிக்குள் நிலைதடுமாறி விழுந்துள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த நல்லுச்சாமி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு செவ்வாய்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.