தற்போதைய செய்திகள்

மருத்துவத் துறையில் ஓட்டுநர், ஆய்வக நுட்பனர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள ஓட்டுநர், ஆய்வுக் கூட தொழில் நுட்புநர் நிலை-3 ஆகிய  பணிக்காலியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.

எஸ். பாண்டியன்

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள ஓட்டுநர், ஆய்வுக் கூட தொழில் நுட்புநர் நிலை-3 ஆகிய  பணிக்காலியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கின்றனர்.
    
இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இப்பணியிடத்திற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். அதோடு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், எஸ்.சி, எஸ்.சி.எ, எஸ்.டி ஆகியோருக்கு 35 வயதிற்குள்ளும், எ ம்.பி.சி, பி.சி, பி.சி.எம் ஆகியோருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

முன்னுரிமை பிரிவினர்: அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர்களுக்கு நாளது தேதி வரையிலும், படைவீரரை சார்ந்தோர், முன்னாள் படைவீரர் சார்நதோர், முன்னாள் படைவீரர் ஆகியோருக்கு-18.9.2009 வரையிலும், அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள்-03.09.1999 வரையில் இருக்க வேண்டும்.

முன்னுரிமையற்றோர் பிரிவினர்: பழங்குடியினர்-23.3.2006 வரையிலும், பிற்பட்ட வகுப்பினர்(முஸ்லீம் பொது)-1.6.2007 வரையிலும், இதர பிரிவினர்-2.9.2005 வரையிலும், அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள்-1.4.2015 வரையிலும் இருக்க வேண்டும்.

ஆய்வக தொழில் நுட்புநர் நிலை-3 பணியிடம்: இப்பணிக்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்று, மருத்துவக்கல்வித்துறை இயக்கத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ இன் மெடிக்கல் டெக்னாலஜி பட்டய பயிற்சி முடித்திருக்க வேண்டும். இதில்,அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள்-23.11.2004 வரையிலும், அனைத்து இதர முன்னுரிமை பிரிவினர்-நாளது தேதி வரையிலும், முன்னுரிமையற்றோர் பிரிவினர் ஆதிதிராவிடர்(பெண்கள்)-20.8.2009 வரையிலும், பிற்பட்ட வகுப்பினர்(பெண்கள்)-27.2.2009 வரையிலும், இதர பிரிவினர்-நாளது தேதி வரையிலும் இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பதிவு மூப்பிற்கு உள்பட்ட பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, இணையதளத்தில் பதவிறக்கம் செய்யப்பட்ட அடையாள அட்டை, அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை ஆகியவையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு 30ம் தேதி நேரில் வந்து தங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே தாமதமாக வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT