முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜயேந்திரர் மற்றும் இலங்கை மந்திரி சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இலங்கை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இலங்கை மந்திரி டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் (மே.1-ம் தேதி) இன்று கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திரர், ஸ்ரீவிஜயேந்திர் ஆகியோர் சிதம்பரத்தில் வி.எஸ்.டிரஸ்ட் சத்திரத்தில் முகாமிட்டுள்ளனர். வியாழக்கிழமை மாலை காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் யாகசாலை பகுதிக்கு பூஜைகளை பார்வையிட்டு தரிசித்தனர். அதேபோன்று இலங்கை இந்து சமய அமைச்சரும், இந்து மறுவாழ்வுத்துறை அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதன் நடராஜர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, யாகாசைலை பூஜைகளை பார்வையிட்டு தரிசனம் செய்தார்.

ஐஜி கண்ணப்பன் ஆய்வு: சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேக பணிகளை வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஐஜியுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா உடன் சென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.