மதுரை விமான நிலையத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட கோரிக்கை
மதுரை விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும்
தற்போதைய செய்திகள்மதுரை விமான நிலையத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்ட கோரிக்கை
மதுரை விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும்
மதுரை விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சி பணியாலர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜர் பாரத பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,
அனைவராலும் போற்றி மதிக்கப்படும் மறைந்த மக்களின் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமை போற்றும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். மேலும் சென்னை ஐ.ஐ.டி-க்கு அப்துல் கலாமின் பெயரை சூட்ட வேண்டும். புதுதில்லியில் சர்வதேச தரத்துடன் ஒரு பொறியியல் கல்லூரி அமைத்து அதற்கும் அவரது பெயரைச் சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.