தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே முன்விரோதத்தில் இடத்தரகர் வெட்டி கொலை

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக இடத்தரகரை  அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தை, மகனை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக இடத்தரகரை  அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தந்தை, மகனை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே சூலக்கரை தெற்குத்தெருவைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மகன் மோகன்(48). இவர் இப்பகுதியில் இடத்தரகர் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் பொம்முகணேசனின் மனைவி கவிதா(30). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறராம். அப்போது, மோகனுக்கும், கவிதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கவிதாவின் தந்தை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆர்.ஆர்.நகரில் உள்ள மதுக்கடையில் மோகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அதையடுத்து, வச்சக்காரப்பட்டி காவல் நிலையம் முன்புறம் நடந்து சென்று  கொண்டிருந்த போது, அப்பகுதியில் மறைந்திருந்த கவிதாவின் தந்தை முத்தையா(55), அவரது மகன் செந்தில்குமார்(25) ஆகியோர் வழிமறித்து அரிவாள், கத்தியால் சராமரியாக வெட்டியும், குத்தியும் உள்ளனர். இதை தடுக்க வந்த அவரது நண்பர்களான சூலக்கரையைச் சேர்ந்த பரமேஸ்வரன்(32), கண்ணன்(30) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதையறிந்த, வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார்கள் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த 2 பேரையும் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து முத்தையா, செந்தில்குமாரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT