முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுக்குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

விருதுநகரில் மதுக்குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:52 AM

விருதுநகரில் மதுக்குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகரில் ஆண்டிக்கிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் என்பவரின் மகள் நர்மதா(25). இவருக்கு கடந்த 2003 ராமனுஜம் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் இரண்டவதாக வீரவாஞ்சியை சேர்ந்த சந்திரசேகர்(35) என்பவருடன் திருமணம் நடந்து, ஒன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரசேகர் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் அடிக்கடி மனைவி நர்மதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதேபோல், புதன்கிழமை இரவு மது குடிக்க பணம் கேட்கவே தர மறுத்த நிலையில், கத்தியால் மனைவியை குத்தி காயப்படுத்தியதோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.