தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பிரதமர் ஆயுள் காப்பீடு, அடல் ஓய்வூதிய திட்ட சிறப்பு முகாம்

விருதுநகரில் தேசிய வங்கிகள் மற்றும் ஆயுள்காப்பீ்ட்டு நிறுவனம் சார்பில் பிரதமர் ஆயுள்காப்பீடு, அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் தொழில் முனைவோர் கடன் திட்ட முாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தேசிய வங்கிகள் மற்றும் ஆயுள்காப்பீ்ட்டு நிறுவனம் சார்பில் பிரதமர் ஆயுள்காப்பீடு, அடல் ஓய்வூதிய திட்டம் மற்றும் தொழில் முனைவோர் கடன் திட்ட முாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் தனியார் அரங்கத்தில் நடந்த முகாமிற்கு பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் எல்.திருஞானசம்பந்தம், பரோடா வங்கியின் கோட்ட மேலாளர் ஜி.சனல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரோடா வங்கியின் முதுநிலை மேலாளர் ஆர்.செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். மேலும், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் எ.சக்திவேல், நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர்  சக்திவேல், ஆகியோர் வங்கி கடனுதவிகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர்.
  
இதில், விருதுநகர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளர் பிரதமர் ஆயுள் காப்பீடு மற்றும் அடல் ஓய்வூதியம் ஆகியவற்றில் சேர்ந்தால் பொதுமக்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது தொடர்பாகவும், சிறுதொழில் கடன் பெற என்ன விவரங்கள் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக பேசினார். அதேபோல், விபத்து காப்பீடு பற்றி முதுநிலை மேலாளர் குலோத்துங்கன் விளக்கமாக பேசினார்.

இந்த முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில், நிறைவாக பரோடா வங்கியின் துணை பொதுமேலாளர் கோபால்விஜயராமன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பரோடா வங்கியின் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT