முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பொறியியல் பட்டதாரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் அருகே பொறியியல் பட்டதாரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 20 ஆகஸ்ட், 2015 at 6:03 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:00 PM

விருதுநகர் அருகே பொறியியல் பட்டதாரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் காசுக்கடை பஜார் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ரவிக்குமார்-ராஜலட்சுமி தம்பதியின் மகள் கலைபிரியா(19). இவர் விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன அமைதியை இழந்த கலைபிரியா புதன்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரையில் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை  கொண்டாராம்.

இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அவரது தாயார் ராஜலட்சுமி புதன்கிழமை இரவு புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பொறியியல் பட்டதாரி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.