தற்போதைய செய்திகள்

காரைக்கால் அருகே வீடு புகுந்து தங்க நகைகள் திருடியவர் கைது

காரைக்கால் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபரை போலீஸôர் கைது செய்து, நகைகளை மீட்டனர்.

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால் அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய நபரை போலீஸôர் கைது செய்து, நகைகளை மீட்டனர்.

காரைக்கால் மாவட்டம் கருக்களாச்சேரி மேலத் தெருவை சேர்ந்த அனுசுயா (61) என்பவர் தங்களது வீட்டின் மாடிக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் வைத்திருந்த 6 பவுன் சங்கிலி, வளையல் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருப்பதாக நிரவி காவல்நிலையத்தில் கடந்த 15.6.2015-ல் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், நாகப்பட்டினம் சட்டையப்ப மேல வீதியை சேர்ந்த மனோஜ் (20) என்பவர் பல்வேறு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு தஞ்சாவூரில் நீதிமன்றக் காவலில் உள்ளார். இவர்தான் கருக்களாச்சேரியில் வீடு புகுந்து நகை திருடியது நிரவி காவல்நிலைய போலீஸôருக்கு தெரியவந்தது.

இவரை நிரவி போலீஸôர் 27-ம் தேதி தஞ்சாவூர் சென்று நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துவந்து விசாரணை நடத்தினர். அனுசுயா வீட்டில் நகை திருடியதையும், விருத்தாசலம், மங்களம்பேட்டில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரை அழைத்துச் சென்று நகையை போலீஸôர் மீட்டு வந்தனர்.

இவர் மீது நிரவி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் காரைக்கால் நீதிமன்றத்தில் அவரை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT