முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டுகிறது: தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை திங்கட்கிழமை எட்டும் என்பதால், உபரி நீர் கேரளாவுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில், முதல்வரின் உத்தரவின் பேரில் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை திங்கட்கிழமை எட்டும் என்பதால், உபரி நீர் கேரளாவுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில், முதல்வரின் உத்தரவின் பேரில் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி முடியாது என்பதால், அணையிலிருந்து உபரி நீர் கேரளாவின் பக்ககம் உபரியாக வெளியேறாமல் தடுக்கம் வகையில் அணையிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு, நீர் மேலாண்மை பணியில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 141.70 அடியாக இருப்பதால், முறைப்படி, ஞாயற்றுக்கிழமை இடுக்கி மாவட்ட பெரியாற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையினை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், ஞாயற்றுக்கிழமை இரவு முதல், அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வரின் பேரில் உடனடியாக திறந்து விடப்பட்டது. அதுவரை 511 கன அடி திறந்து விபட்டிருந்து நிலையில், இரவு முதல் 1,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால், முல்லைப் பெரியாற்றின் கரையோரம் தேனி மாவட்டம் லோயர்கேம்பிலிருந்து வைகை அணை வரை வாழும் மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
திங்கட்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141,70 அடியாக உ ள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,696, அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு 1,400 கன அடியாக உள்ளது. அணையில் மொத்த நீர் இருப்பு 7,585 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.