முகப்பு
தற்போதைய செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி லாரி ஓட்டுநரிடம் பணம் பறிப்பு: பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்

விராலிமலை அருகே மணல் லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

விராலிமலை அருகே மணல் லாரி ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் அமிர்தலிங்கம்(39), லாரி ஓட்டுநர்.

இவர் இன்று திருச்சியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார்.  விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் அருகே வந்த போது 3 பேர் லிப்ட் கேட்டு ஏறியுள்ளனர். சற்றுதூரம் லாரி சென்றதும் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அமிர்தலிங்கம் வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இவரது அலரல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் 3 பேரை வளைத்து பிடித்து விராலிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தேவகோட்டை க. பாலமுருகன்(30), திருமயம் ரா. விஜி(எ) பாண்டிசெல்வம், (37) மன்னார்குடி பி. விக்னேஷ்(20) என்று தெரிவந்ததைத் தொடர்ந்து அவர்களை 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.