புதுச்சேரியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் ராகுல்காந்தி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை புதுச்சேரி வந்திறங்கினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை புதுச்சேரி வந்திறங்கினார்.
புதுச்சேரி ரோடியார் பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். அவர் காரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் பின்னர் ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார் ராகுல்.
தொடர்ந்து கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் அவர் பார்வையிடுகிறார். அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரும் அவர், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.