முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை பாதிப்பு: எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சிஎஸ்ஐ திருச்சபை முடிவு

மழை பாதிப்பால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டா சிஎஸ்ஐ திருச்சபை தீர்மானித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:46 AM
பகிர்:

மழை பாதிப்பால் எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டா சிஎஸ்ஐ திருச்சபை தீர்மானித்துள்ளது.

இத்திருச்சபையின் கீழ் கோரிமேட்டில் உள்ள தூய லூக்கா ஆலய போதகர் அலெக்சாண்டர் கூறியதாவது:

தென்னிந்திய திருச்சபையின் கீழ் சென்னை 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் இத்திருச்சபைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னை மக்களின் துயரில் பங்கு கொள்ளும் வகையில் புதுச்சேரியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆடம்பரத்தை ரத்து செய்துள்ளது.

அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலய பங்குமக்களின் வீடுகள் தோறும் இசைக்குழுவினருடன் சென்று பாட்டுப்பாடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வருகையை வெளிப்படுத்தி மகிழ்வோம்.

இந்த ஆண்டு சென்னை மக்களின் துயரில் பங்கேற்பதற்காக இசைக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளது. மவுனமாக சென்று அக்குடும்பத்தினருக்கும், சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கும் பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளோம்.

அப்போது அக்குடும்பத்தினர் பாடகர் குழுவிற்கு தேனீர், கேக் தருவர். இதனை ரத்து செய்து இதற்காக செலவிடும் பணத்தை  பெற்று நிவாரணப்பணிக்கு செலவிட உள்ளோம். மேலும் கிறிஸ்துமஸ் தினத்தின்போது ஆலயத்தை அலங்கரிப்பதையும் ரத்து செய்து, அப்பணத்தையும் நிவராணப்பணிக்கு வழங்க உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.