முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரள முதல்வரை கண்டித்து பெரியாறு அணை மீட்புக்குழுவினர் ஆர்பாட்டம்

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாறு அணை மீட்புக்குழுவினர், வழக்கறிஞர் சங்கம், மற்றும் அணைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:47 AM
பகிர்:

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாறு அணை மீட்புக்குழுவினர், வழக்கறிஞர் சங்கம், மற்றும் அணைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் லோயர்கேம்பில் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கிய நாளிலிருந்தே கேரள அரசும், அரசியல்வாதிகளும் நாள்தோறும் ஏதாவது புரளி ஒன்றை கிளப்பி அங்குள்ள மக்களை குழப்பி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,

கேரள முதல்வர் உம்மன்சாண்டி இருமாநில மக்களின் நல்லுறவை குலைக்கும் வகையில், முல்லைப்பெரியாறு குறித்து தேவையில்லாத தகவல்களை பேசிவருவதை கண்டித்தும், அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் 142 அடி தண்ணீர் தேக்த தீர்ப்புக்கூறிய பின்னும் அணை பலவீனமடைந்துள்ளது என்று கூறும் கேரள முதல்வர்மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரியும், அணை பாதுகாப்பில் உள்ள கேரள போலீஸாரை மாற்றி மத்திய பாதுகாப்பு படையை நிறுவவேண்டும், அணை பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதால், பெரியாறு அணைக்கென தனியாக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு அவர் கண்காணிப்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டுமென போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார், வழக்கறிஞர் சங்க தேனி மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், கூடலூர் அணைத்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த செங்குட்டுவன், பெரியகுளம் நகர்நலகமிட்டி விஜயபாஸ்கர் உட்பட சுமார் 50 பேர் லோயர்கேம்பில்  சனிக்கிழமை ஆர்பாட்டம் செய்தனர்.

ஆர்பாட்டத்தை முன்னிட்டு லோயர்கேம்பில் உத்தமபாளையம் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்பாட்டத்திற்கு முன்னதாக பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவுசெய்த போராட்டக்காரர்களை போலீஸார் லோயர்கேம்ப் பஸ்நிறுத்தத்தில் வைத்து தடுத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், பஸ் நிறுத்தத்திலேயை ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர், அரைமணி நேற ஆர்பாட்டத்திற்கு பின்னர் போலீஸ் பாதுதாப்போடு பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.